tamilnadu

img

பாஜக முன்னாள் மாவட்டச் செயலாளர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார்....

திருச்சூர்/பத்தனம்திட்டா:
கேரள மாநிலம் திருச்சூர், பத்தனம்திட்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் சங்பரிவார்- பாஜக, காங்கிரஸ் கட்சிகளிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளனர்.திருச்சூர் மாவட்டத்தில் பாஜக முன்னாள் திருச்சூர் மாவட்டச் செயலாளரும் கர்ஷக மோர்ச்சா (விவசாயிகள் முன்னணி) முன்னாள் மாநில துணை தலைவருமான எம்.வி.இராஜன், பாஜகவின் முன்னாள் மண்டல செயலாளர் பி.கே.பாபு, சிபிஐகுருக்கஞ்சேரி வட்டார முன்னாள் செயலாளர் சிவதாஸ் மங்குழி, மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரும் சிபிஐ ஒல்லூர் மண்டலக்குழு உறுப்பினருமான ராஜன் பாறமேல் உட்பட 35 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். இவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியை கட்சியின் மாநிலச்செயற்குழு உறுப்பினர் பேபிஜான் துவக்கி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.கே.கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.எம்.வர்கீஸ் செம்மலர் சூட்டிவரவேற்றார்.

பத்தனம்திட்டா மாவட்டம்
பத்தனம்திட்டா மாவட்டம் கொன்னி அருவபுளம் பஞ்சாயத்தில், 32 குடும்பங்கள் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு வெளியேறி சிபிஎம்-இல் இணைந்தன. ஒரு வாரத்திற்கு முன்பு இதே பஞ்சாயத்தில் 28 குடும்பங்கள் அந்த அமைப்புகளை விட்டு வெளியேறி சிபிஎம்-இல் இணைந்த னர்.கடந்த மூன்று மாதங்களில், பத்தனம்திட்டா மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாஜக, காங்கிரஸை விட்டு வெளியேறி சிபிஎம்-இல்இணைந்துள்ளன. எல்டிஎப் அரசின்சிறந்த பணிகளால் தாங்கள் ஈர்க்கப் பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். மோடி தலைமையிலான மத்திய அரசின்கொள்கைகள் மக்கள் நலன்களுக்கு எதிராகவும், மக்களை பிளவுபடுத்தி மதச்சார்பற்ற, ஜனநாயக கோட்பாடுகளை குழிதோண்டி புதைப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

;